வங்கதேசத்தினர் அத்துமீறல் ஆட்டோ டிரைவர்களிடம் மாநகர கமிஷனர் விசாரணை

திருப்பூர், ஜன.4: திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் வடநாட்டினர், வங்கதேசத்தினர் அத்துமீறல் உள்ளதா என ஆட்டோ டிரைவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் திடீர் விசாரணையில் ஈடுபட்டார்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பின்னலாடை நிறுவனங்கள், கறிக்கோழி பண்ணைகள், எண்ணெய் அரவை ஆலைகள், இரும்பு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால்தொழிலாளர்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் தொழில் நகராக இருப்பதால் வடமாநில தொழிலாளர்கள் தினமும் நுாற்றுக்கணக்கில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். திருட்டுத்தனமாக வங்க தேச நாட்டிலிருந்தும் திருப்பூர் வருகின்றனர். இது குறித்து திருப்பூர் மாநகர் போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் நேற்று மதியம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ ஸ்டோண்டிற்கு சென்றார். ஆட்டோ டிரைவர்களிடம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சந்தேகப்படும் படியாக இருந்தால் போலீசாருக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

Related Stories: