போக்குவரத்துக்கு இடையூறு ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஜெயங்கொண்டம், ஜன.4: ஜெயங்கொண்டம் கடைவீதியில் கடைகளின் முன்பாக ஆக்கிரமித்துள்ள இடங்களை நேற்றுமுதல் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.ஜெயங்கொண்டம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று முதல் அகற்றப்பட்டு வருகி ன்றன. தஞ்சை, கடலூர், அரியலூர் மூன்று மாவட்டங்கள் இணையுமிடத்தில் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கரை பாலம் சேதம் அடைந்து கடந்த 2008 ஆம் வருடம் முதல் போக்குவரத்துகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகா கேரளா எல்லையில் பெய்த மழையால் காவிரியில் புரண்டு கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது.

அப்போது பல அணைகள் சேதமடைந்தன. இதில் அணைக்கரை கொள்ளிடம் பாலம் வலுவிழ ந்திருந்தது. இதனால் அணைக்கரை வழியாக சென்னை, கடலூர் போன்ற பகுதி களிலி ருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற பகுதிக ளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம், தா.பழூர், நீலத்தநல்லூர் வழியாக கும்பகோணம், தஞ்சை நோக்கி சென்று வருகின்றன. இதனால் ஜெயங்கொண்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க கடந்த வாரம் அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு கடைகளுக்கு முன்பாக ஆக்கிரமித் துள்ள இடங்களை அகற்றி

தருமாறு அறிவுறுத்தி சென்றார்.

இதன் அடிப்படையில் நேற்று முதல் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ் சாலைதுறை, காவல்துறை, நகராட்சி ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

Related Stories: