தலைஞாயிறு ஊராட்சியில் கஜா புயல் சீரமைப்பு பணி ஆய்வு

வேதாரண்யம், ஜன.4: தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கள்ளிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். நாலுவேதபதி கிராமத்தில் புயலால் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் 14 நவீன மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார். வௌ்ளப்பள்ளம் ஊராட்சி வானவன்மகாதேவியில் கஜா புயலால் சேதமடைந்துள்ள மரங்களை 13 நவீன மரம் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு வெட்டி அப்புறப்படுத்தப்படும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் கோயில்பத்து கிராமத்தில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: