திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு

திருத்துறைப்பூண்டி ஜன.3 : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள்சங்க 55வது  ஆண்டுவிழா 2019ம் ஆண்டு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சரக்கு மற்று சேவைவரிசட்டத்தில் தற்போது அமுலாக்கத்திலுள்ள அதிகபட்ச 28 மற்றும் 18 சதவிகித வரிகளை முழுமையாக நீக்கி 5 மற்றும் 12 சதவிகிதவரி மட்டுமே வசூலிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயசட்டத்தில் வணிகர்களை பாதிக்கின்றசட்டவிதிகளில் உரியமாற்றங்கள் செய்து தண்டனைவிதிப்பைதவிர்க்க வேண்டும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மத்தியமாநில அரசுகள் சிறப்பு பொருளாதார சாகுபடி விவசாயமண்டலமாக அறிவிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்தமாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2019புதியநிர்வாகிகளாக தலைவர் செந்தில்குமார், செயலாளர் கணபதி, பொருளாளர்  ராமசாமி, துணை தலைவர் ஜபருல்லா, துணை செயலாளளர் லட்சுமணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: