வேட்டவலம் புனித சூசையப்பர் திருத்தல ஆண்டு பெருவிழா

வேட்டவலம், ஜன.3: வேட்டவலம் மலையில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சூசையப்பர் திருத்தல 163ம் ஆண்டு பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சூசையப்பர் திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது.

ஆயந்தூர் பங்குதந்தைகள் பன்னீர்செல்வம், கிளமெண்ட் ரொசாரியோ, அருட்தந்தை டேவிட் உட்பட பலர் மலைக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்ட 10 கட்டளைகள் கல்லினை அர்ச்சிப்பு செய்து ஆடம்பர சிறப்பு கூட்டு திருப்பலியினை நடத்தினர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் வேப்பூர் அருட்தந்தை மங்கள டேவிட் தலைமையில் ஆடம்பர சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனித சூசையப்பரின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடந்தது.

Related Stories: