பரசலூர் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில்,டிச.28: நாகை மாவட்டம், செம்பனார்கோவிலை அடுத்து பரசலூர் பகுதியில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பரசலூர் பகுதியில் தமிழக அரசால் நடத்தப்படும் 2 டாஸ்மாக் கடையை பொதுமக்கள் மற்றும் கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடையூறாக இருப்பதால் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் இரணியன் தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் பரசலூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களான, மேலக்கட்டளை, மஹாராஜபுரம், சாத்தனூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் குடிமகன்களால் பெண்கள், மாணவர்கள், கோயில், தேவாலயங்களுக்கு செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மதுபான கடையை அகற்ற வேண்டும்.  குடிமனை பகுதியில் தமிழக அரசு டாஸ்மாக் கடையினை நடத்துவதற்கு சட்டம் இல்லை என்பதால், சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி இடத்தின் உரிமையாளரையும் கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷமிட்டனர்.  இதில் ஐந்து கிராமங்களின் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தளபதி விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஜே இந்திய தேசியலீக், குறிஞ்சி நில மக்கள் பேரவை, தமிழக நிலம், நீர் பாதுகாப்புஇயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: