பொன்னமராவதியில் செயல்படாத சுத்திகரிப்பு நிலைய குடிநீர் தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை

பொன்னமராவதி,டிச.19:   பொன்னமராவதியில் நீண்ட நாட்களாக செயல்படாமல் கிடக்கும் சுத்திகரிப்பு குடிநீர்  வழங்கும் தொட்டியினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பில் பொன்.புதுப்பட்டி பிடாரி கோயில் அருகில் சேங்கை ஊரணியின் தென் கரையில் பொன்னமராவதி பகுதி மக்களுக்கு தூய குடிநீர்வழங்குவதற்காக குடிநீர்சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு இதன் சேவை கடந்த 2015-2016ல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு  18லிட்டர்கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ரூ5க்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தூய குடிநீரை குறைவான விலைக்குப்பெற்று வந்தனர்தினசரி நூற்றுக்கணக்கான கேன்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர்என குடிநீர்தொட்டியில் மோட்டார்பழுதடைந்துள்ளதால் தற்போது குடிநீர்விநியோகம் இல்லை. பாலமுருகன் கோயில் அருகில் குடிநீர்வழங்கும் இடம் செயல்படவுள்ளது என எழுதப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் இங்கு மோட்டார்சரிசெய்யப்பட்டு குடிநீர்வழங்கப்படவில்லை. மாற்றுஇடத்திலும் குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் குடிநீர்பயன்பாட்டிற்காக ரூ6லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டுவந்த இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்தொட்டியினை உடனடியாக சரிசெய்து தூய குடிநீர்வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: