கருகும் சம்பா பயிரை காக்க வடவாற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

மன்னார்குடி, டிச.16: கஜா புயலால் பாதிப்பால் போர்வெல்லுக்கான மின்சாரம் இணைப்பு துண்டிக் கப்பட்டதால் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிரை காக்க வடவாற்றில் முழு கொள்ளளவு தண்ணீரை பொது பணித்துறை அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து திமுக  எம்எல்ஏ டிஆர்பி ராஜா  வெளியிட்டுள்ள அறிக்கை: கஜா புயலினால் டெல்டா விவசாயிகள் மிகபெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். புயல் கடந்து 30 நாட்கள் ஆகியும் மின்சாரம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள்  புயலினால் ஒரு புறம் சேதமடைந்து கிடக்கிறது.  இருக்கிற பயிரையாவது காப்பாற்ற தேவையான  தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வெடித்து கிடப்பது விவசாயி களை மேலும்  வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து வடவாற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நான் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தேன்.

அதன் பலனாக கடந்த 10ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வரும் போது 6 ஆயிரம் கன அடியாக வந்தது. அதிலிருந்து வடவாற்றுக்கு 108 கன அடி எடுக்கப் பட்டது.தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் மேட்டூரில் இருந்து 12,500 கன அடி திறக் கப்பட்டு கல்லணைக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதிலிருந்து வடவாற்றில் 405 கன அடி விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று (நேற்று) மதியம் வெண்ணாற்றில் கூடுதலாக திறக்கப்பட்ட 1802 கன அடி தண்ணீர் தென் பெரம்பூர் விவிஆர் கேட் பகுதிக்கு வர குறைந்தது. 6 மணி நேரம் ஆகும். இதனை  பயன்படுத்தி வடவாற்றில் குறைந்த பட்சம் விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் விடுவிப்பதாக  என்னிடம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் மன்னார்குடி பகுதி விவசாய நிலங்களுக்கு வந்து சேரும் என தெரிகிறது.இந்நிலையில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தங்கள் உயரதிகாரிகளோடு பேசி நீரின்றி கருகும் சம்பா பயிரை காப்பாற்ற குறைந்தது விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்வதோடு, முழு கொள்ளளவான 484 கனஅடி தண்ணீரை எடுப்பதற்கும்  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: