செந்துறை காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

செந்துறை,டிச.12: அரியலூர் மாவட்டம் செந்துறை  காவல் நிலையத்தில் அரியலூர்  எஸ்பி சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி சீனிவாசன்  செந்துறை காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்யாத வழக்குகள் பற்றி கேட்டறிந்தார். பொதுமக்கள் தங்களிடம் விசாரணை செய்யாத வழக்குகள் பற்றி மனு அளித்தனர் அதனை பெற்றுக்கொண்ட சீனிவாசன் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து போலீசாருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அதன் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

பின்னர் குழுமூர் கிராமத்தில் பொதுமக்களை அழைத்து போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தினை நடத்தினார். அப்போது பேசிய அவர் போலீசார் மற்றும் பொதுமக்கள் நட்புறவுடன் இருக்க வேண்டும் ரவுடித்தனம் செய்பவர்களை  அடக்குவோம்  என்றார்.  அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து எந்த நேரத்திலும் தங்களது பிரச்னை தொடர்பாக என்னை அழைக்கலாம் என்று கூறினார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால்,

Related Stories: