செய்யாறு வேளாண்மை விரிவாக்க மையம் பூட்டியே கிடப்பதால் விதைகள் வாங்க முடியாமல் விவசாயிகள் அவதி

செய்யாறு, டிச.11: செய்யாறு வேளாண்மை விரிவாக்க மையம் நேற்று பூட்டி கிடந்ததால், விவசாயிகள் விதைகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல், மணி, உளுந்து போன்ற விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அலுவலகம் சரிவர திறப்பதில்லை. இதனால் பாப்பாந்தாங்கல், சேராம்பட்டு, முக்கூர், வாக்கடை, பெருமாந்தாங்கல், முருகத்தான்பூண்டி, பாராசூர் போன்ற கிராமங்களிலிருந்து வந்த விவசாயிகள், விதைகளை வாங்க முடியாமல் பலமணி நேரம் காத்திருந்து, வெறுங்கையோடு திரும்பி செல்கின்றனர்.

அலுவலகத்தின் வெளியே காத்திருந்த விவசாயிகள் புகார் பெட்டியில் மனுக்களை எழுதி போட்டனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், நாங்கள் தினமும் வந்து பார்க்கிறோம். எப்போது அலுவலகம் திறக்கிறார்கள், மூடுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரிவில்லை என்று விவசாயிகள் கூறினர்.

Related Stories: