அஞ்செட்டி அருகே 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

தேன்கனிக்கோட்டை, டிச.4: அஞ்செட்டி அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு, இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே மரியாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(35) கூலி தொழிலாளியான இவரது மனைவி ஜெயப்பிரியா(28). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த ஜெயப்பிரியா இரண்டு குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துள்ளார். பின்னர், தானும் பூச்சி மருந்து குடித்து விட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு, இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: