“நாட்டுப்பற்று-தேசிய நிர்மாணம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா பேச்சு போட்டி

கிருஷ்ணகிரி, டிச.4: குடியரசு தினவிழாவினையொட்டி, கிருஷ்ணகிரியில் வரும் 6ம் தேதியன்று நாட்டுப்பற்று மற்றும் தேசிய நிர்மாணம் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து நேரு யுவகேந்திராவின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் குடியரசு தினவிழாவினையொட்டி “நாட்டுப்பற்று மற்றும் தேசிய நிர்மாணம்” என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5000, 2ம் பரிசாக 2000, 3ம் பரிசாக 1000 வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் முதல் வெற்றியாளர் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 25000, 2ம் பரிசாக 10000, 3ம் பரிசாக 5000 வழங்கப்படும். இதேபோல், மாநில அளவில் வெற்றிபெறும் முதல் வெற்றியாளர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவர். தேசிய அளவில் முதல் பரிசாக 2 லட்சம், 2ம் பரிசாக 1 லட்சம், 3ம் பரிசாக 50,000 வழங்கப்படும். போட்டியில் 18 முதல் 25 வயதுக்குள் உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் போட்டிகள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டி வரும் 6ம் தேதி கிருஷ்ணகிரி பெண்கள் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. பங்கேற்க விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவகேந்திரா, எண்.515-சி, காமராஜ் நகர், ராயக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரம் அறிய விரும்புவோர் 04343 226444 என்ற தொலைபேசியிலோ அல்லது 9442945534 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார்.

Related Stories: