லீ பஜார்- செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்

 சேலம், நவ.29: சேலம் லீ பஜார்- செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடித்து வணிகர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, வர்கீஸ், திருமுருகன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பது:

சேலம் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது. அந்த வகையில், சேலம் லீ பஜார்- செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் பணி நிறைவு பெறாமல் உள்ளன. சேலம் மாவட்ட வணிகர்களின் வாழ்வாதாரமும், பொதுமக்களும் பாதிக்கும் வகையில் உள்ளது.

மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் அரசு கையகப்படுத்தும் இடத்திற்கு சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீடு வழங்கி, மேம்பால பணியை விரைவில் முடித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தை செயல்படுத்தி, நலிந்த வணிகர்களுக்கு வணிகர் நல வாரியத்தின் சார்பில் நல உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: