மயிலாடுதுறை சீர்காழி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

மயிலாடுதுறை,நவ.28: மயிலாடுதுறை சீர்காழி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பாதை வள்ளாலகரம் பகுதியில் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றன, மயிலாடுதுறை நகருக்குள் நுழையும் போது 3 கி.மீ., தூரத்திற்கு பெரிய அளவில் வளைவுகள் இல்லை.  இதனால் வாகனங்கள் கண் மூடித்தனமாக படு வேகத்தில் செல்கின்றன. மாருதி கார் விற்பனையகம் முன் ஒரு வேகத்தடை போடப்பட்டுள்ளது, அந்த பகுதியில் வாகனங்கள் எடுக்கும் வேகம் மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதிவரை தொடர்கிறது, இதற்கிடையே சிவப்பிரியா நகர் என்ற இடத்தில் அரசு போக்குவரத்துக்கழம் அறிவித்துள்ள பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது, அதையடுத்து தனியார் நர்சரி பள்ளிக்கு செல்லும் வழி பிரிகிறது, இவ்வாறு 3 கி.மீ தூரம் வரை முக்கியச்சாலையில் வாகனங்கள் வருகின்றன. அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் பேருந்துகள் செல்லும் வேகத்தால் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

ஏற்கனவே சிவப்பிரியா நகர் பேருந்து நிறுத்தம் பகுதி மற்றும் சேந்தங்குடி ஆர்ச் பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்ததால் அதிலிருந்து காப்பாற்றும் பொருட்டு வேகத்தடைக்கு பதிலாக வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கு வாகனங்கள் குறுகலாக செல்லும் அளவிற்கு பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது, இதனால் வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் கடந்த 5 மாத காலமாக பேரிகார்டுகள் அகற்றப்பட்டதிலிருந்து தொடர்ந்து வாகனங்களின் வேகம் அதிகரிப்பால்  விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே அரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் உடனடியாக இப்பகுதியை மேலும் ஆய்வுசெய்து இரண்டு இடங்களில் வேகத்தடை அமைத்து மயிலாடுறை நகருக்குள் செல்லும்போது குறைந்த வேகத்துடன் செல்லவும் விபத்தில்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவே உடனடியாக மயிலாடுதுறை போலீசார் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை அமைத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: