கரூர் வெங்கமேடு அமராவதி வாய்க்காலில் தூர்வாரிய களி மண்ணை அகற்ற மக்கள் கோரிக்கை

கரூர், நவ. 23: சுகாதார கேடு ஏற்படுவதால் கரூர் வெங்கமேடு அமராவதி வாய்க்காலில் தூர்வாரிய கழிவு மண்ணை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் வெங்கமேட்டில் அமராவதி வாய்க்கால் உள்ளது. பாசனநீர் செல்லும் இந்த வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மிகுந்த வெங்கமேடு பால இறக்கத்தில் இருப்பதால் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக திடக்கழிவு கரைந்து சுகாதார கேடு ஏறுபடுகிறது. மேலும் மீண்டும் கரைந்து வடிகாலில் போய் மண் கலந்து வருகிறது. எனவே உடனடியாக கழிவுமண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: