சிறைக் கைதிகளுக்கு எய்ட்ஸ், காசநோய் கண்டறிய சோதனைக்கூட வாகனம் துவக்கம்

திருச்சி, நவ.21:  திருச்சி சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ், காசநோய் உள்ளதா என கண்டறிய சோதனைக்கூட வாகனத்தை கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். தேசிய காசநோய் ஒழிப்பு மையம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இணைந்து மாவட்டத்தில் உள்ள சிறைகைதிகளுக்கு எய்ட்ஸ், டி.பி. நோய் உள்ளதா என கண்டறிய சோதனைக்கூட வாகனம் துவக்க விழா நடைபெற்றது. வாகனத்தை துவக்கி வைத்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்தில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு எய்ட்ஸ், டி.பி. உள்ளதா என டிசம்பர் 1வரை அந்தந்த சிறைசாலைகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்படவுள்ளது. மத்திய சிறைச்சாலையில் வருகிற 27ம் தேதி வரை கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மகளிர் சிறைச்சாலையில் வருகிற 28ம் தேதியும், சங்கிலியாண்டபுரம் எம்.ஆர் ஹோமிலும், மன்னார்புரம் சுவாதர் கிரசிலும், வி.என் நகரில் உள்ள குழந்தைகள் ஹோம் ஆகிய இடங்களில் உள்ள நபர்களுக்கு 29ம் தேதியும்,  துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய துணை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு 30ம் தேதியும் எய்ட்ஸ் மற்றும் டி.பி. பரிசோதனை செய்யப்படவுள்ளது என்று கூறினார். இணை இயக்குனர் சம்ஷாத்பேகம், துணை இயக்குனர் சாவித்திரி, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: