தி காவிரி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மன்றம் தொடக்க விழா

சேலம், நவ.21:   தி காவிரி பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில், கேஏசிஇ மாணவர் மன்ற தொடக்க விழா மற்றும் “தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள புதிய வாய்ப்புகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சந்தோஷ், வணிக தலைவர் செயல்பாடு, மற்றும் முகமது அப்சர மீரா, தொழில்நுட்ப பயிற்றுநர் வெப்டு ஆல், பெங்களூரு ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் துரைசாமி வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினர் சந்தோஷ் மாணவர் மன்ற இதழை வெளியிட்டு பொறியாளர் தினத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கணினி துறை தலைவர் பாலமுருகன் பங்கேற்று, மன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  விழாவில் மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கல்வி நிறுவனங்களின் கவுரவ தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், செயல் இயக்குநர் கருப்பண்ணன், டீன் ஓபுலி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: