தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

தாரமங்கலம், நவ.21:  தாரமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் தாரமங்கலம் பகுதியில் நேற்று, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி அறிவுரைப்படி, தாரமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் பத்மபிரியாவின் ஆலோசனையின் பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பத்மநாபன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் முத்துகவுண்டர் ஆகியோர் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

இதில் தாரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், பள்ளி, கல்லூரி, கோயில்கள், ஏடிஎம் மையம் மற்றும் தியேட்டர்களில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளித்தல், மற்றும் கிருமி நாசிகளை தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: