82வது நினைவு தினம் நெல்லையில் வஉசி சிலைக்கு சர்வகட்சியினர் மரியாதை

நெல்லை, நவ.19: கப்பலோட்டிய தமிழன் வஉசியின் 82வது நினைவுநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் தாசில்தார் ஆவுடைநாயகம், வருவாய் ஆய்வாளர் அருணாசலம் ஆகியோர் மாலையணிவித்தனர். திமுக சார்பில் நெல்லை தொகுதி எம்எல்ஏ ஏஎல்எஸ் லட்சுமணன் மாலையணிவித்தார். வக்கீல் அணி துணைச் செயலாளர் உமாமகேஸ்வரன், தலைமை பேச்சாளர் திராவிடமணி, பொன்னையா பாண்டியன், கலை இலக்கிய பகுத்தறி பேரவை துணை அமைப்பாளர் மேகை செல்வம், மாணவரணி துணை அமைப்பாளர் சூரிகணேஷ், பரமசிவன், மாடசாமி உட்பட பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். முத்துக்கருப்பன் எம்.பி, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், ஜெ.பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் மோகன், கிருஷ்ணமூர்த்தி, மாதவன், நெல்லை பேரங்காடி முன்னாள் சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கேபிஆர்.கிருஷ்ணன், வக்கீல் ஜெனி, நிர்வாகிகள் டால் சரவணன், நத்தம் வெள்ளப்பாண்டி, மாநில பேச்சாளர்கள் காந்திமதிநாதன், வாஸ்து தளவாய், கபாலி, நெடுஞ்செழியன், சிறுபான்மை பிரிவு அப்துல்அஜீஸ், காந்தி வெங்கடாசலம், திருத்து சின்னத்துரை, ஈஸ்வரகணபதி, பக்கீர்மைதீன், நவுஷாத், சீனிமுகமதுசேட், நயினாமுத்துராஜ், டவுன் சந்திரசேகர், கேடிசி பகவதிமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். பொருளாளர் பால்கண்ணன், அவைத்தலைவர் ஜெகநாதன், பகுதி செயலாளர்கள் அசன்ஜாபர்அலி, துவரை பேச்சிமுத்து, ஜெ.பேரவை செயலாளர் சுரேஷ்குமார், எம்.சி.ராஜன், ஆவின் அன்னசாமி, மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் பரமசிவ ஐயப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் உக்கிரபாண்டியன், தமிழ்செல்வி, வட்ட செயலாளர்கள் பூக்கடை சப்பாணிமுத்து, சுப்ரீத் சுப்பிரமணியன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்டராஜா, எஸ்.பி.ராஜா, வெள்ளாளங்குளம் மாரியப்பன், வல்லரசு முருகன் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி மாலையணிவித்தார். துணைச் செயலாளர் பழனிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, பொதுக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்கம் காமராஜ், பகுதி செயலாளர்கள் பாளை ஆரோக்கிய அந்தோனி, நெல்லை ஜலீஸ்ரகுமான், இளைஞரணி முருகன், மானூர் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் அபூபக்கர், செல்வராஜ், வேம்பன், ஆனந்தராஜ், முத்துக்குமார், காந்திமதிநாதன், கணேசன், சொரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பா.ஜ. சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகள் சுரேஷ், மகாராஜன், வேல்முருகன், விவசாய அணி மாநில நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் அழகு ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், வசந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் மாலையணிவித்தனர். கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம் சிவகுமார், பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத்தலைவர் பேட்டை சுப்பிரமணியன, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமேஸ்வரன், பொன்ராஜேந்திரன், மண்டல தலைர்கள் மாரியப்பன், ஐயப்பன், பாலாஜி, ஷேக்பக்கீர் மைதீன், தனசிங்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் சபீக் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் வண்ணை சுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அனஸ்ராஜா, பாளை ரசூல் மைதீன், விவசாய அணி மாநில செயலாளர் வாகை கணேசன், மாவட்ட தலைவர் மலைராஜா, 45 வது வார்டு முருகன், நிர்வாகிகள் கேஎஸ் மணி, ரசூல் மைதீன், சேவாதளம் சரவணன், மயில்ராவணன், மகளிரணி மாரியம்மாள், முன்னாள் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், சிவாஜி முத்தையா, பழவூர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மருதம் ஆனந்த், ராஜகோபால், உன்னங்குளம் சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். தமாகா சார்பில் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். வர்த்தக அணி சக்சஸ் புன்னகை, மாநில செயலாளர் சரவணன், டிபிஎஸ் சுப்பிரமணியன், பெரோஸ்கான், மாரிதுரை, பார்த்திலிங்கம், ஷெரீனா ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் சுதர்சன், அமல்ராஜ், ராமையன்பட்டி மஸ்தான், மணப்படை மணி, சந்தரலிங்கம் ஆத்தியப்பன், குலசை நம்பி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: