பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

நெல்லை, நவ. 16: தச்சை வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ராமையன்பட்டி அருகிலுள்ள விவசாய பண்ணையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடினர். பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா விவசாயம் பற்றிய பல தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உறிஅடித்தல், சிலம்பம், பல்லாங்குழி, பாண்டி ஆட்டம், கோலி, தாயம், பம்பரம், கண்ணாமூச்சி ஆகியவற்றை மாணவ மாணவிகள் விளையாடி மகிழ்ந்தனர். மழலையர்கள் சிறு குறு நாடகங்கள், நடனம் நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் முதல்வர் சோமசுந்தரி, பொது மேலாளர் ஜிபி அய்யர், மேலாளர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.  பாளை ரகுமத்நகர் ஆதித்யா வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுந்தரி செய்திருந்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நெல்லை கொண்டாநகரம் கிங்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. துணை முதல்வர் ஹென்றி ஜேக்கப் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி செயலர் சந்துரு நன்றி கூறினார். நெல்லை புறநகர் ரோட்டரி சங்கம் சார்பில் பாளை கிறிஸ்துராஜா பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்லானி சென்றவார நிகழ்வுகள் கூட்டறிக்கை வாசித்தார். நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவானந்த் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.

பின்னர் சங்கத்தின் சிறகுகள் வார இதழை அவர் வெளியிட முன்னாள் தலைவர் கிளாடிஸ் ஸ்டெல்லாபாய் பெற்றுக் ெகாண்டார்.  நெல்லை சரணாலயம், பாளை ஜாய்பவனம் சிறுவர்களின் தனித்திறன்களுக்காக பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  முன்னதாக டாக்டர் ஆனிரேக்லணட்  இறைவணக்கம் பாடினார். டாக்டர் உஷாதேவி திருக்குறள் சிந்தனை வழங்கினார்.  ஊடகத்துறை ஹசன், அருணாசிவாஜி உள்பட பலர் பங்கேற்றனர். முத்துமணி நன்றி கூறினார்.

Related Stories: