திமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு

கறம்பக்குடி, நவ.15: கறம்பக்குடி திமுக நகரம், மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளை சரிபார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னகர், வடக்குத்தெரு மற்றும் வடக்கு ஒன்றியத்தில் பிலாவிடுதி, ரெகுநாதபுரம், புதுவிடுதி  ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட  பூத்  கமிட்டிகளை பென்னாகரம் தொகுதி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர செயலாளர் முருகேசன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், அப்துல் அஜீஸ், செல்வராஜ், வெற்றிவேந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைஅமைப்பாளர் கோவிந்தன், ராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி, பரூக் மற்றும்  நகர, வார்டு நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: