கடையம் அருகே சடலம் புதைத்த இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு

கடையம், நவ. 14: கடையம் அருகே கேரளாவில் இருந்து மர்மமான முறையில் சடலத்தை கொண்டு வந்து புதைத்த இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட்  தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன் (53). இவருக்கு திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து கேளையாபிள்ளையூர் செல்லும் சாலையோரத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது மைத்துனர் ஆயத்துல்லா பராமரித்து வருகிறார். இந்த நிலத்தில் கடந்த 8ம் தேதி  கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் பொட்டல்புதூர் மெயின்ரோட்டை சேர்ந்த சேக் உதுமான் மகன் கலிலுர் ரகுமான் மற்றும் 5 பேர் சேர்ந்து அத்துமீறி நுழைந்து மர்மமான சடலத்தை சட்டவிரோதமாக புதைத்தனர்.

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசில், காஜா மைதீன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று கடையம் வருவாய் ஆய்வாளர் அர்ஜூனன், பொட்டல்புதூர் ஊராட்சி விஏஓ வேல்ராஜ், நில அளவையர் சிலம்பரசன், ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ காஜா முகைதீன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது காஜா முகைதீன் நிலத்தில் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்து சடலத்தை புதைத்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: