இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வலைதள பயிற்சி

நாகை,அக்.30: நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் அமேசான் வெப் சர்வீஸ் இணைந்து ஐசிடி அகாடமி மூலம் இரண்டாம் ஆண்டு ஐ.டி, இ.சி.இ, எம்சிஏ மாணவர்களுக்கு ஏடபிள்யுஎஸ் கிளவுடு கல்வி அறிவு நாள்  நடைபெற்றது. இந்த வலைதள பயிற்சி மற்றும் போட்டிக்கு கல்லூரியின் செயலர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். முதல்வர் ராமபாலன், துறை தலைவர்கள் மணிகண்டன், வனிதா, பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கல்வி அறிவு நிகழ்ச்சி வலைதளம் மூலம் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.  இதற்கான ஏற்பாட்டை உதவி பேராசிரியர்கள் ஆனந்த்பாபு, ஆதிரை மற்றும் உதவியாளர்கள் தாமரை, முத்து, ெஐய், யாசர், இளஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர். இதன் மூலம் கல்லூரிக்கு ஏடபிள்யுஎஸ் அங்கீகாரம் கிடைத்தது.

Related Stories: