அரசு மருத்துவமனையில் அவலம் சாலையயை செப்பனிடக்கோரி கே.புதூர் மக்கள் மனு

மதுரை, அக். 30:  கே.புதூர் தொழிற்பேட்டை, சிட்கோ பகுதியை சேர்ந்த மக்கள் சுந்தரராஜ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் நடராஜனிடம் அளித்த மனுவில், “மதுரை கே.புதூர், ஐடிஐ. தொழிற்பேட்டை வழியாக கே.கே.நகர் செல்லும் சாலையில் நிறைய பள்ளங்கள் உள்ளன. அதேபோல், கற்பகநகர், சிட்கோ வழியாக மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையிலும், கே.புதூர் ஐடிஐ பிஷப் ஹவுஸ், தொழிற்பேட்டை காலனி வழியாக போஸ்ட் ஆபீஸ் செல்லும் சாலையிலும் நிறைய பள்ளங்கள் உள்ளன.

இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இச்சாலையை செப்பனிடக்கோரி, மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி இச்சாலைகள் தொழிற்பேட்டை நிர்வாகம் மற்றும் சிட்கோ நிர்வாகத்திற்குள் வருவதால், அவர்கள் தான் செப்பனிட வேண்டும் என பதில் எழுதியுள்ளனர். எனவே இச்சாலையில் உள்ள பள்ளங்களை தொழிற்பேட்டை, சிட்கோ நிர்வாகம் செப்பனிட உத்தரவு பிறக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

Related Stories: