ஆர்.கே.பேட்டையில் முடங்கிய தார்சாலைப்பணி: பொதுமக்கள் அவதி

பள்ளிப்பட்டு,அக்.23: ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  தினம் தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாற்றாக கடந்த சில ஆண்டு

களுக்கு முன்பு ₹1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு,  தற்போது புதிய கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி வருகின்றது.  

அலுவலக நுழை வாயில் பகுதியிலிருந்து புதிய கட்டிடத்திற்குச் செல்ல சாலை அமைக்க ஏதுவாக ஓரு ஆண்டுக்கு முன்பு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. இருப்பினும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் புதிய கட்டிடத்திற்கு செல்ல வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் ஜல்லி கற்கள் மீது நடந்து செல்வதால் கால்களில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: