ஆறுமுகநேரி பகுதி இளைஞர்கள் தமாகாவில் ஐக்கியம்

தூத்துக்குடி, அக். 17: தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் முன்னிலையில் திருச்செந்தூர் வட்டாரம் ஆறுமுகநேரி பகுதியிலுள்ள தேரடி முத்து தலைமையில் மாடசாமி, மணிகண்டன், சக்தி, பாலமுருகன், தியாகராஜன், வனராஜ், நாகராஜ், அண்ணாமலை, பரத்ஆனந்த், முத்தரசு, சுடலைமுத்து, ஐயப்பன், பிரேம்குமார், செல்வலிங்கம், முத்து, மணிகண்டபாரத், ஜெயக்குமார், ரட்சன், சிவா உட்பட பல இளைஞர்கள் மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலனுக்கு மாலை அணிவித்து த.மா.காவில் இணைந்தனர். ஆழ்வை கிழக்கு வட்டார தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்நேருராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் பொன்ராஜ் மற்றும் மகாராஜன்,     மாநகர செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தர்லிங்கம், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: