பொன்னமராவதி அருகே கபடி போட்டி

பொன்னமராவதி,அக்.16: பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார்கோயில் முன்பு மட்டாங்காடு எம்கேபி ஸ்போர்ட் கிளப், மீனாட்சி பிரதர்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள்  சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கபடிப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்குபெற்று கபடி விளையாடினர். இதில் முதல்பரிசை நத்தம் ஒத்தினிப்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை குன்னத்தூர்அணியினரும், மூன்றாம் பரிசை மட்டங்காடு அணியினரும், 4வது பரிசை கண்டியாநத்தம் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

Related Stories: