உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பழநி, அக். 11: உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பழநியில் ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பழநியில் ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கன்பத் கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, பிஜேபி நிர்வாகி திருமலைசாமி, கனகராஜ்,  னதண்டாயுதபாணி பக்தர் பேரவை நிர்வாகி செந்தில்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆன்மீக நம்பிக்கையை சிதைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக ஐயப்பன் சிலையை ரதத்தில் வைத்து பாதவிநாயகர் கோயிலில் இருந்து சன்னதி வீதி, பூங்கா ரோடு, பாளையம் சாலை வழியாக போராட்டம் நடந்த பஸ்நிலையம் ரவுண்டானாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: