வத்தலக்குண்டு வி.குரும்பபட்டியில் ரூ.26 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம்

வத்தலக்குண்டு, செப். 21: வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி வி.குரும்பபட்டியில் அயோத்தி தாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.20 லட்சம் மற்றும் பொதுநிதி ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.26 லட்சம் நிதியில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து சாலை பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியதனம் ஆண்டி, மாவட்ட பிரதிநிதி கார்த்திக், கிளை செயலாளர் முனியாண்டி, ஒப்பந்தக்காரர் நரசிம்மன், ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, பால்ராஜ், சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டு வி.குரும்பபட்டியில் ரூ.26 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: