மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

கரூர், செப்.25: மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் புகழூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் மரவள்ளிக் கிழங்குகள் நாமக்கல் மாவட்டத்தில் புதன்சந்தை, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரிபேட்டை, ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஜவ்வரிசி தயார் செய்யும் கிழங்குமாவு ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.  புரோக்கர்கள் மூலமாக கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. கிழங்கின் தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.5500க்கு விலை போனது. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தினர் ரூ6,500க்கு வாங்கி சென்றனர்.  ஜவ்வரிசி விலை உயர்ந்து வருவதால் மரவள்ளிக்கிழங்கின் விலையும் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: