செங்கோட்டையில் சமாதான கூட்டம்

செங்கோட்டை, செப்.25: செங்கோட்டையில் கடந்த 13, 14ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.தொடர்ந்து கடைகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. இதனையடுத்து செங்கோட்டை பகுதியில் வரும் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  கலவரம் தொடர்பாக பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இரு தரப்பினரிடையே சமாதான கூட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஎஸ்பி மணிகண்டன், தாசில்தார் வெங்கடாசலம் தலைமை வகித்தனர்.  இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் இரு தரப்பு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Related Stories: