கறம்பக்குடி மழையூரில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை பயிற்சி முகாம்

கறம்பக்குடி, செப். 21: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாரம் மழையூர் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் 2018- 2019ம் ஆண்டிற்கான புதிய பயிர்  ரகங்கள் செயல்பாடுகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு வட்டார தொழில் நுட்ப குழு அமைப்பாளர் மற்றும் கறம்பக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.இப்பயிற்சியில் குடுமியான்மலை அட்மா துணை திட்ட இயக்குனர் கலந்து கொண்டு புதிய பயிர் ரகங்கள் பற்றி எடுத்து கூறினார். புதுக்கோட்டை அட்மா வேளாண்மை அலுவலர் அன்பரசன் பருவத்திற்கு ஏற்ற ரகங்கள் பற்றியும், மேலும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார்.உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு தொழில் நுட்ப கருத்துக்கள் பற்றியும் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சி முகாமில் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தை சேர்ந்த மழையூர் பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்காண ஏற்பாடுகளை கறம்பக்குடி வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் வீரமணி மற்றும் பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: