பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளில் சிஇஓ திடீர் ஆய்வு

பொன்னமராவதி, செப்.19:  பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா எவ்வித முன்னறிவிப்புமின்றி பார்வையிட்டு திடீர் ஆய்வுமேற்கொண்டார். பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டம், பள்ளி வளாகத் தூய்மை, மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள், மெல்லக்கற்போருக்கு பள்ளிகளில் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள், வகுப்பறைகளின் கட்டமைப்புகள், மதிய உணவு ஆகிய அனைத்து பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.  பின்னர் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகத்தையும், வட்டார வளமையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார வளமையத்தில் நகர்வு பதிவேட்டின்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வைக்கு சென்றுள்ளார்களா என ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, முதன்மைக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரோசாரியோ, வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: