வரி உயர்வை கண்டித்து திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல், செப். 19: வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் குடிநீர், சாலை, சாக்கடை, தெருவிளக்கு மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் அனைத்துக்கும் வரியை உயர்த்தி உள்தை கண்டித்தும், மேலும் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் தலைமை வகித்தார். மாவட்ட குழு கருப்புசாமி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சிறப்புரையாற்றினார். இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வீட்டு வரி உயர்த்தாதே, குப்பை வரி போடாதே என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: