தேசிய போட்டியில் குயின்ஸ் பள்ளி சாதனை

நெல்லை, செப். 12: தேசிய அளவிலான எரிபொருள் சேமிப்பு குறித்த போட்டியில் குயின்ஸ் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பெட்ரோலியதுறைஅமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற ஷாக்ஷம் சிறந்த சூழ்நிலைக்கான எரிபொருள் சேமிப்பு என்ற தலைப்பில் நடந்த தேசிய அளவிலான கட்டுரை, ஓவியம், வினாடிவினா போட்டியில் குயின்ஸ் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசும், கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை பாரத் பெட்ேராலிய மண்டல மேலாளர் ராகவேந்திராராவ் மற்றும் விற்பனை அதிகாரிஅனில் குமார் வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர்மற்றும் நிர்வாகி பாராட்டினர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளையும், தேவையான நிதியுதவியையும் மாமணி ஏஜென்சி சுப்பிரமணியன்

செய்திருந்தார்.

Related Stories: