மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தஞ்சை, ஆக. 13:  தஞ்சை மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு நடந்தது. மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடந்த தேர்வுக்கு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் காசிபாஸ்கரன் முன்னிலை வகித்தார். 16 வயதுக்கு உட்பட்ட 55 கிலோ எடையுள்ள 85 வீரர்கள், 35 வீராங்கனைகள் பங்கேற்றனர். இரு பிரிவிலிருந்தும் தலா 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செயப்பட்டவர்கள் செப்டம்பர் 7ம் ந்தேதி முதல் 9ம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டம் புகழடி பள்ளி விளையாட்டு மைதானத்தில் வீராங்கனைகளுக்கும், வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை விழுப்புரம் மாவட்டம் ஏர்வாய்ப்பாடி பள்ளி மைதானத்தில் வீரர்களுக்கான மாநில அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

மாநில அளவிலான போட்டிகளில் 34 மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில்  இரு பிரிவிலிருந்து தலா 12 பேரை தேர்வு செய்து அகில இந்திய அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கபடி கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். பொருளாளர் தனசேகர், அமைப்பு செயலாளர் பக்கிரிசாமி, இணை செயலாளர்  அறிவழகன், சேரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  நடுவர் ஒருங்கிணைப்பாளர் வைரக்கண்ணு செய்திருந்தார்.

Related Stories: