ஸ்மார்ட் கார்டு கிடைக்க நுகர்வோர் நலமன்றம் ேகாரிக்கை

திருப்பூர், ஆக.7: திருப்பூர் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:  கடந்த 6 மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசால் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் 1,135 ரேஷன் கடைகள்

உள்ளன. 6 லட்சத்து 87 ஆயிரத்து 143 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், 2 லட்சத்து 45 ஆயிரத்து 697 பேருக்கு மட்டுமே ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை. இதனால் ஸ்மார்ட் கார்டு கிடைக்காத மக்கள் தினமும் ரேஷன் கடைக்கு அலைந்தவாறு உள்ளனர். ஸ்மார்ட் கார்டு  வராதது குறித்து கேட்டால், ஊழியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமண உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை என பல்வேறு நலத்திட்ட உதவி பெற முடியாமல் போகிறது.  ஆகவே, ஸ்மார்ட் கார்டு கிடைக்காத மக்களுக்கு, விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: