செல்போனில் பேசியவாறு வாகனம் இயக்கிய 3 டிரைவரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

அரியலூர், ஜூலை 7: அரியலூரில செல்போனில் பேசியவாறு வாகனங்களை இயக்கிய 3 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.அரியலூர் முதல் கீழப்பழுர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில் போலீசார் ஈடுப்பட்டனர். அப்போது செல்போனில் பேசியவாறு 3 வாகனங்களை டிரைவர் இயக்கியது, 4 லாரிகளில் அதிக சுமை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 7 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்துக்கு தற்காலிக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செல்போனில் பேசிய படியே வாகனத்தை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு வருகிறது. எனவே டிரைவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தெரிவித்தார்.

Related Stories: