தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன்

கன்னியாகுமரி, ஜூன் 21: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் நடந்தது.கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், கடல் மார்க்கமான கடத்தலை தடுக்கும் பொருட்டும், கடல் மற்றும் கடலோர பகுதிகளில் மாதந்தோறும் சஜாக் ஆபரேஷன் எனும் அதிதீவிர கண்காணிப்பு ேராந்து பணி நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான சஜாக் ஆபரேஷன் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் தூத்துக்குடி மரைன் போலீசார் இணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் இருந்து கூடன்குளத்திற்கு ஒரு குழுவும், முட்டத்துக்கு மற்றொரு குழுவுமாக 2 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, நாகராஜன், நம்பியார்,  மற்றும் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 48 கடலோர கிராமங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக கடலோர சாலைகள் மற்றும் சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: