கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் குவிண்டாலுக்கு ரூ.5529என அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது.கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள், நாச்சியார்கோவில், ஆதனூர், திருவிடைமருதூர், சேங்கனுர், மகாஜனகுடி மற்றும் அகராத்தூரை சேர்ந்த விவசாயிகள் 250 பேர் 1600 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை ஏலம் எடுக்க சேலம், கும்பகோணம், செம்பனார்கோயில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பருத்தி வியாபாரிகள் வந்திருந்தனர்.வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு விலை நிர்ணயித்து ஏலப்பெட்டியில் போட்டனர். இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.5,529 ம், சராசரி விலையாக ரூ.5,510 ம், குறைந்த பட்ச விலையாக ரூ.4,669 ம் விலை முடிவானது.

Related Stories: