பொதுமக்கள் தேவைகளை முதல்வர் உடனுக்குடன் நிறைவேற்றுகிறார்: 100 நாள் வேலை பணியாளர்கள் பெருமிதம்

கந்தர்வகோட்டை: பொதுமக்கள் தேவைகளை அறிந்து உடனுக்குடன் முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என்று 100 நாள் வேலை பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புனல்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சிறப்பாக வேலை நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சியில் அரசின் வழிகாட்டுதல்படி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த பணியாளர்களிடம் விசாரித்தபோது, பொதுமக்கள் தேவைகளை தமிழக முதல்வர் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார் எனவும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உரிமை தொகை ஆயிரம் வழங்க உத்தரவு அளித்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டப்பணி ஆட்களுக்கு கூடுதல் ஊதிய வழங்க உள்ளதை அறிந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயுள் காப்பீடு செய்ய அவர் அவர் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு தொகையை கொடுத்து அவர்களது குடும்பத்தை காக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு இட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: