சோழிங்கநல்லூர் தொகுதியில் நீண்ட காலமாக குடியிருப்பவருக்கு பட்டா: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேசுகையில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உள்ளகரம், புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர், கொட்டிவாக்கம், கந்தன்சாவடி, பாலவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை, நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, காரப்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, மேடவாக்கம், செம்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மயிலை பாலாஜி நகர், உள்ளகரம் சர்வே எண் 90.91க்கு பட்டா வழங்க வேண்டும் என அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

Related Stories: