குளுகுளு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். தற்ேபாது கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் நேற்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகளவில் இருந்தது. மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.

இதுதவிர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்து மகிழ்ந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்.  கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவு காரணமாக பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் நேற்று பகலில் வெயில் வாட்டிய போதும் மாலையில் சாரல் மழை பெய்தது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் வெகுவாக அனுபவித்தனர்.

Related Stories: