அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இந்நிலையில் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை சூரத் செல்ல இருக்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது, நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி விவகாரம் பேசுபொருளாக இருந்தது. இதனைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடிகளின் பெயர்கள் எல்லாம் மோடியாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இது மோடி சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகும் என கூறி ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: