ரூ.95 கோடி வங்கி கடன் மோசடியில் தொழிலதிபர் கைது

புதுடெல்லி: வங்கி கடன் மோசடி வழக்கில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் தொழிலதிபர் கவுசிக் குமார் நாத். இவர் போலி ஆவணங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் வாங்கியுள்ளார். இதேபோல், கவுசிக் குமார் நாத் தனது தோற்றத்தை மாற்றி கொண்டு மும்பை  வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்த புகார்களின் அடிப்படையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கவுசிக் குமார் நாத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை ஏப்ரல் 10ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Related Stories: