தகுந்த ஆய்வுகளுக்கு பின் வார்டு மறுசீரமைப்புக்கு நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தகுந்த ஆய்வுகளுக்கு பின் வார்டு மறுசீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி பதில் நிகழ்வின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் (அதிமுக)ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: ஒரு சில மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கணவர், மனைவி பெயர் அல்லது தந்தை, மகன் பெயர் வெவ்வேறு வார்டுகளில் உள்ளது.

இதனை போக்கும் விதமாக வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்‌ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், இதற்கென அமைக்கப்பட்ட கமிட்டி ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: