சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்; சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும்.

59.59 ஏக்கர் நீர்தேங்கும் பகுதியில் பூந்தோட்டம், மூங்கில் காடுகள், குறுங்காடுகள், கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய இணையப் பாதுகாப்பு 2.O கொள்கை புதுப்பிக்கப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், பிற நகரங்களுக்கும், விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கு ஒற்றை நுழைவுதளம் உருவாக்கப்படும். 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகள் இ-சேவை, மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் நம்பகமான அதிவேக இணைய சேவை வழங்கப்படும். எல்காட் ஐடி பூங்காக்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையங்கள் செங்கல்பட்டு, ஈரோடு, நெல்லை ஆகிய இடங்களில் அமைக்கப்படும்

Related Stories: