சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எல்லைச் சாலை திட்டம்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எல்லைச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சட்டபேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எல்லைச் சாலையை 132.87 கி.மீ.நீளத்துக்கு ரூ.15,626 கோடியில் 6 வழி  இரட்டை பாதையாக உருவாக்க உத்தேசம். இருவழிச் சேவை சாலைகளை உருவாக்க திட்டம்; சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்காக தற்போது வரை ரூ.556 கோடி செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: