சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சென்னை: சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர், பராமரிப்பு பணிகளுக்கு கூட 40 சதவீதம் குறைவாகதான் வசூல் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் சுங்கக் கட்டணத்தை நிறுத்த கோரிக்கை வைத்து வருகிறேன். 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் உயர்வு என ஒன்றிய அரசு கூறுகிறது எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: