அதிமுகவினர் தொகுதிகளில் 21,728 விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

சென்னை: அதிமுகவின் 66 உறுப்பினர்களின் தொகுதிகளிலும் 21,728 விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். வால்பாறை தொகுதியில் பட்டியலின, மலைவாழ் மக்கள் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வால்பாறை தொகுதியில் மட்டும் 998 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Related Stories: